சூரிய சக்தியில் சார்ஜ் ஏறும் எலான் மஸ்க்கின் Tesla Pi ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டெஸ்லா பை’(Tesla Pi) என்று அழைக்கப்படும் இந்த சாதனம், இணைய இணைப்பு இல்லாமல், சார்ஜ் செய்யத் தேவை இல்லாமல் செயல்படும் என்று கூறப்படுகிறது.
டெஸ்லா அல்லது மஸ்க் இதுவரை இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவாதம் தொடங்கியது.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்
SpaceX-யின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை, பாரம்பரிய செல் நெட்வொர்க்குகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளிலும் உலகளாவிய கவரேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் முழுமையாக சூரிய சக்தியால் இயங்கும் என்று கூறப்பட்டாலும், அது சாத்தியமில்லை. இருப்பினும்,டெஸ்லாவின் சோலார் தொழில்நுட்ப நிபுணத்துவம் இது பயன்படுத்தப்படலாம்.
பயனர்கள் தங்கள் எண்ணங்களைக் கொண்டு சாதனத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கும். இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த தொழில்நுட்பம், மனித-கணினி தொடர்பை புரட்சிகரமாக்கும்.
விலை
இந்த அம்சங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய தாகத் தோன்றினாலும், பெரும்பாலும் ஊகங்களாகவே உள்ளன.
இந்த போனின் எதிர்பார்க்கப்படும் விலை சுமார் $100 என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |