பாதுகாப்புக்கு என எலோன் மஸ்க் செலவிடும் தொகை எவ்வளவு? உயர் பாதுகாப்புக்கான பின்னணி
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களின் பாதுகாப்பு, அவர்கள் ஈடுபட்டுள்ள தொழிலைப் போலவே முக்கியமானது.
பாதுகாப்பை வலுப்படுத்துவது
வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல், உலகப் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் தேவைகள், தொழில்நுட்பத்தில் புதிய போக்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் மாறிவரும் கருத்துக்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில்,
தொழில்நுட்ப ஜாம்பவான்களை உருவாக்குபவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமாகிறது. இதன் காரணமாக பாதுகாப்புக்கு என அவர்கள் செலவிடும் தொகையும் அதிகமாகிறது.
கோடீஸ்வரர்கள் அல்லது பெரும் தொழிலதிபர்களுக்கு ஏன் உயர் மட்ட பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால் அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று, இந்த வணிகர்கள் அதிக பங்குகள் கொண்ட திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்,
சில சமயங்களில் அவை முக்கியமான தொழில்நுட்பம் அல்லது உலக அளவிலான அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். அவர்களின் பாதுகாப்பிற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், அத்தகைய பொறுப்புகளில் இருப்பவர்கள்,
உலகெங்கிலும் உள்ள குடிமக்களைப் பாதிக்கும் அவர்களின் முடிவுகள் அல்லது ஈடுபாடு மற்றும் அவர்களின் ஆக்ரோஷமான அல்லது துணிச்சலான அறிக்கைகள் காரணமாக பெரும்பாலும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
மார்க் ஜுக்கர்பெர்க் மட்டும்
உலகின் முதல் 10 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் பாதுகாப்பு செலவுகள் என்பது, மார்க் ஜுக்கர்பெர்க் மட்டும் அவருக்கு என செலவிடும் தொகையை விடக் குறைவு.
ஆப்பிள், என்விடியா, அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாப்ட் மற்றும் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக செலவிட்ட தொகை தோராயமாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
மெற்றா நிறுவனம் 2024ல் தோராயமாக 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது ரூ 221 கோடி தொகையை ஜுக்கர்பெர்க்கின் மொத்த பாதுகாப்புக்கு என செலவிட்டுள்ளது.
இதில் அவரது குடும்பத்திற்கான, பயணத்தின் போது மற்றும் குடியிருப்புக்கான பாதுகாப்பு செலவுகளும் அடங்கும். ஆனால் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் கடந்த 2023ல் தமது பாதுகாப்புக்கு என வெறும் ரூ 21 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார்.
Foundation Security என்ற எலோன் மஸ்க்கின் நிறுவனமே அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கிறது. பொதுவாக 20 மெய்க்காப்பாளர்கள் சூழவே எலோன் மஸ்க் பயணப்படுவார்.
ஒவ்வொரு ஆண்டும்
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலோன் மஸ்க் தொடர்ந்து பின்தொடர்பவர்கள் மற்றும் கொலை மிரட்டல்களை எதிர்கொள்கிறார் என காவல்துறை மற்றும் டெஸ்லா பதிவுகளில் தெரிய வருகிறது.
மஸ்க்கின் பாதுகாப்பு நிறுவனம் மட்டுமின்றி, Gavin de Becker and Associates என்ற தனியார் நிறுவனமும் மஸ்க்கின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆல்பாபெட், அமேசான், என்விடியா மற்றும் பலந்திர் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு பட்ஜெட்டுகளை 10% க்கும் அதிகமாக அதிகரிக்கின்றன.
ஜெஃப் பெசோஸ்ஸின் பாதுகாப்புக்கு என ஆண்டுக்கு சுமார் ரூ 13 கோடி வரையில் அமேசான் நிறுவனம் செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |