ட்ரம்புடனான மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு

Donald Trump Elon Musk Tesla
By Arbin Jun 06, 2025 05:38 PM GMT
Report

டெஸ்லா கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையேயான மோதல் போக்கு எல்லை மீறியுள்ளதுடன், சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருடன் ட்ரம்புக்கு தொடர்பிருந்ததாகவும் மஸ்க் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சுமார் 27 பில்லியன் டொலர்

ஆனால் இந்த மோதல் போக்கால் ட்ரம்பல்ல எலோன் மஸ்க் ஒருவரே பேரிழப்பை எதிர்கொள்ள இருக்கிறார் என்பது வெளிவரும் தகவல்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்புடனான மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு | Elon Musk Stands To Lose In Trump Spat

வியாழக்கிழமை ஒரே நாளில் மஸ்க்கின் சொத்து மதிப்பில் சுமார் 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கும் மிகப்பெரிய பெடரல் கடன்கள் மற்றும் மானியங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

வெளிவரும் தரவுகளின் அடிப்படையில் கடந்த 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில், எலோன் மஸ்க்கின் நிறுவனங்கள் சுமார் 38 பில்லியன் டொலர் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது?

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது?

சுமார் 330 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட எலோன் மஸ்க் ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கை முடிவு ஒன்றை கடுமையாக எதிர்ப்பதே இந்த மோதல் போக்கிற்கு காரணம்.

ட்ரம்பின் ஒற்றை முடிவால் அமெரிக்க அரசாங்கத்திற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றே எலோன் மஸ்க் எச்சரித்து வருகிறார். மஸ்க்கின் மிகப்பெரிய நிறுவனங்களான டெஸ்லா மற்றும் SpaceX ஆகியவை கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து அதிகபட்ச உதவியைப் பெற்றுள்ளது.

ட்ரம்புடனான மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு | Elon Musk Stands To Lose In Trump Spat

SpaceX தலைவரும் COO பொறுப்பில் இருப்பவருமான க்வின் ஷாட்வெல் தெரிவிக்கையில், SpaceX நிறுவனம் அரசாங்க செலவினத்தில் 22 பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளார்.

52 ஒப்பந்தங்கள்

கடந்த ஓராண்டில் மட்டும் நேரடி அரசாங்க ஒப்பந்தங்களால் எலோன் மஸ்க் சுமார் 3.8 பில்லியன் டொலர் தொகையை சம்பாதித்துள்ளார். மேலும், சுற்றுச்சூழல் சார்ந்த பெடரல் மற்றும் மாகாணத் திட்டங்களிலிருந்து பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டெஸ்லா ஏற்கனவே 11.4 பில்லியன் டொலர் ஒழுங்குமுறை வரவுகளைப் பெற்றுள்ளது.

ட்ரம்புடனான மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு | Elon Musk Stands To Lose In Trump Spat

அந்த மொத்த தொகையில் குறைந்தது 2.1 பில்லியன் டொலர் புதிய கார்களை உருவாக்கவும் அதன் பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் டெஸ்லா நிறுவனத்திற்கு உதவியுள்ளது.

ஆனால் இந்த ஒழுங்குமுறை ஆதாயங்களை அகற்ற விரும்புவதாக ட்ரம்ப் இன்னும் கூறவில்லை. வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அடுத்த சில ஆண்டுகளில் மஸ்க்கின் நிறுவனங்களுக்கு கூடுதலாக 11.8 பில்லியன் டொலர் ஆதாயம் தரும் ஏழு வெவ்வேறு அரசு நிறுவனங்களுடன் 52 ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது சிக்கலில் முடியலாம்.

மேலும், வியாழக்கிழமை மட்டும் டெஸ்லா பங்குகள் 12 சதவீதம் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US