இந்தியாவில் களமிறங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்... Jio, Airtel நிறுவனங்களுக்கு புதிய சவால்
மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது.
கணிசமாக அதிகமாக இருக்கும்
செயற்கைக்கோள் அடிப்படையிலான துல்லியமான இணைய சேவைகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் உறுதியளிக்கிறது. இருப்பினும், அதன் விலை நிர்ணயம் இந்திய நுகர்வோருக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
ஃபைபர் சேவைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களை விட ஸ்டார்லிங்க் கட்டணங்கள் கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதன் கட்டணங்களை ஸ்டார்லிங்க் அறிவிக்கவில்லை என்றாலும், சர்வதேச அளவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் வசூலிக்கும் கட்டணங்களை ஒப்பிட முடியும்.
வெளிவரும் தகவலின் அடிப்படையில் Starlink சேவைகளை பயன்படுத்த முடிவு செய்த இந்திய பயனர்களுக்கு முதல் ஆண்டில் தோராயமாக ரூ.1.58 லட்சம் செலவாகும். அடுத்து வரும் ஆண்டுகளில் ரூ 1.15 லட்சம் என கட்டணம் குறைக்கப்படும்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க
இதில் Starlink சேவைக்கான கருவிகளின் விலை ரூ.37,400 மற்றும் மாதாந்திர கட்டணம் ரூ.7,425 என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி மாதாந்திர கட்டணத்துடன் 30 சதவிகித வரியும் வசூலிக்கப்படும்.
ஸ்டார்லிங்க் சேவைகளின் அடிப்படைக் கட்டணம் மாதத்திற்கு ரூ. 7,400 ஆக இருக்கலாம், இது ஃபைபர் சேவைகளுக்கு தற்போது பெரும்பாலான பயனர்கள் செலுத்துவதை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாகும்.
இந்தியா போனற ஒரு சந்தையில், அதிக கட்டணத்துடன் ஸ்டார்லிங்க் களமிறங்கும் என்றால், வாடிக்கையாளர்களை ஈர்க்க போராட வேண்டி வரலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், கட்டண நிர்ணயத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டால் மட்டுமே Starlink நிறுவனத்தால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |