கடத்தல்காரர்களிடம் Starlink சேவை... சிக்கலில் எலோன் மஸ்க்: முகேஷ் அம்பானிக்கு அடித்த லொட்டரி
எலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தொடங்குவதற்கான ஒப்புதலைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய சர்ச்சை
கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட Starlink சேவை சாதனங்கள் தொடர்பான சமீபத்திய சர்ச்சையே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் போது அதிகாரிகள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்களை கண்டுபிடித்தனர்.
மேலும், கடத்தல்காரர்கள் வழிஅறிவதற்காக செயற்கைக்கோள் இணைய சேவைகளைப் பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டது. இது இந்தியாவின் உள்விவகார அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்குள் கவலையை எழுப்பியுள்ளது.
தவறான பயன்பாடு
குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த சாதனங்களின் சாத்தியமான பயன்பாடு குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்க்காரர்களிடம் கைப்பற்றப்பட்ட இந்த சாதனங்களின் உண்மையான வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசாங்கம் கோரியபோது, தரவு தனியுரிமைச் சட்டங்களை மேற்கோள் காட்டி Starlink இணங்க மறுத்தது.
பின்னர், இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்பு துறையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்விவகார அமைச்சகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் ஸ்டார்லிங் சேவையின் தவறான பயன்பாடு குறித்த கவலைகளே ஸ்டார்லிங்கின் இந்திய சேவைக்கு மேலும் தாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால், முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவில் ஸ்டார்லிங்கின் சேவை தாமதத்தால் பலனடையும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |