ஆண்டு பிறந்து மூன்றே மாதத்தில் ரூ 10 லட்சம் கோடியை இழந்த உலகின் பெரும் கோடீஸ்வரர்
ஆண்டு பிறந்து மூன்றே மாதத்தில் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பலர் பெரும் செல்வத்தை இழந்துள்ளனர்.
மிகப்பெரிய இழப்பை
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் தனது மொத்த சொத்து மதிப்பில் இருந்து சுமார் ரூ 10.1 லட்சம் கோடியை கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இழந்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் உலகின் முதல் நிலை 10 பணக்காரர்களில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தவராக எலோன் மஸ்க் மாறியுள்ளார். 121 பில்லியன் டொலர் அளவுக்கு பெரும் இழப்பை எதிர்கொண்டாலும், தற்போதும் உலகின் பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
ஏப்ரல் 10ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் தற்போதைய அவாது சொத்து மதிப்பு 311 பில்லியன் அமெரிக்க டொலர். எலோன் மஸ்க் மட்டுமின்றி, பல முன்னணி தொழிலதிபர்களும் இந்த ஆண்டு பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் எலோன் மஸ்க் அளவுக்கு இழப்பை எதிர்கொள்ளவில்லை. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சுமார் 36.5 பில்லியன் டொலர்களையும், பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் 13.9 பில்லியன் டொலர்களையும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 2.57 பில்லியன் டொலர்களையும் இழந்தனர்.
மஸ்க்கின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு மிகப்பெரிய காரணம் டெஸ்லாவின் பங்கு மதிப்பில் ஏற்பட்ட மோசமான சரிவுதான். மட்டுமின்றி, டெஸ்லா நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் சந்தையின் கணிக்க முடியாத நிலை குறித்து முதலீட்டாளர்களும் கவலையில் உள்ளனர்.
அரசியல் ஆதரவும்
சமீபத்திய மூன்று நாட்களில், உலகின் முதல் நிலை பத்து பணக்காரர்கள் சேர்ந்து 172 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தனர், அந்தக் காலகட்டத்தில் மஸ்க் மட்டும் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தார்.
டெஸ்லா நிறுவனத்தில் அவருக்கு சொந்தமான பங்குகள், SpaceX உள்ளிட்ட மற்ற நிறுவனங்கலில் இருந்து வரும் வருவாய் என தற்போதும் மஸ்கின் சொத்து மதிப்பு உச்சத்தில் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தரவுகள் அடிப்படையில் மஸ்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டொலர்.
உலகமெங்கிலும் உள்ள பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி, மஸ்கின் எதிர்பாராத வீழ்ச்சிக்கு அவரது அரசியல் ஆதரவும் முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நெருக்கமான ஆலோசகராக வலம் வரும் எலோன் மஸ்க், ஐரோப்ப நாடுகளில் வளர்ந்து வரும் தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதும், அவரது சொத்து மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக கூறுகின்றனர்.
தற்போது அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் டெஸ்லா மீதான எதிர்ப்பும் பங்குச்சந்தையில் டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சியும் தொடர்கதையாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |