Tesla நிறுவனர் Elon Musk-ன் ஆண்டு வரி எவ்வளவு தெரியுமா? அவரே பதிவிட்ட ட்வீட்
Elon Musk 2021-ஆம் ஆண்டுக்கான வரியாக 11 பில்லியன் டொலர் செலுத்தவுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், SpaceX மற்றும் Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான Elon Musk 2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவிலேயே அதிகமான வரி செலுத்தும் மனிதராக மாறுவார் எனத் தெரிகிறது.
எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 278.4 பில்லியன் டொலராகும். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டொலர் ஆகும். இதில் 14 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் தன்வசம் வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் மூலம் அவருக்கு வருமானம் மிக அதிகமாக கிடைப்பதிகாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் எலான் மக்ஸ் 11 பில்லியன் டொலருக்கும் அதிகமாக வரி செலுத்தலாம் எனத் தெரிகிறது.
For those wondering, I will pay over $11 billion in taxes this year
— Elon Musk (@elonmusk) December 20, 2021
ஒருவேளை இந்த ஆண்டு எலான் மஸ்க் 12 பில்லியன் டொலர் வரி செலுத்தினால், அது அமெரிக்காவில் உள்துறைக்கு மிகப்பெரிய அளவில் வருவாயாக இருக்கும்.
மேலும், அப்படி நடந்தால் அமெரிக்காவிலேயே இதுவரை அதிக வரி செலுத்திய நபராக எலான் மஸ்க் மாறுவார்.
கடந்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எலிசபெத் வாரன் (Elizabeth Warren) மஸ்க்கை கடுமையாக சாடினார். அதில், “எலான் மஸ்க், மக்களுக்கு இலவசமாக உதவி செய்து வரிச்சலுகை பெறுவதை நிறுத்திவிட்டு அரசுக்கு முறையாக வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் “2021-ஆம் ஆண்டு பாருங்கள் அமெரிக்காவில் இதுவரை யாரும் செலுத்தாத தொகையை நான் வரியாகச் செலுத்துவேன்” எனத் தெரிவித்தார்.