ட்ரம்புடன் கூட்டு சேர்ந்த எலோன் மஸ்க்... கடும் வீழ்ச்சியை சந்திக்கும் டெஸ்லா நிறுவனம்

Donald Trump Elon Musk Tesla
By Arbin Mar 11, 2025 04:58 AM GMT
Report

உலகின் பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் திங்களன்று 15 சதவிகித சரிவைச் சந்தித்தன, இது செப்டம்பர் 2020 க்குப் பிறகு அந்த நிறுவனத்தின் மிக மோசமான சரிவு என்றே கூறப்படுகிறது.

800 பில்லியன் டொலர்

கடந்த வாரம் உட்பட மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தொடர்ச்சியாக ஏழாவது வாரமாக இழப்புகளைச் சந்தித்துள்ளது, இது கடந்த 2010 ஆம் ஆண்டு நாஸ்டாக்கில் அந்த நிறுவனம் அறிமுகமானதிலிருந்து மிக மோசமான தொடர் இழப்பு என்றே பதிவாகியுள்ளது.

ட்ரம்புடன் கூட்டு சேர்ந்த எலோன் மஸ்க்... கடும் வீழ்ச்சியை சந்திக்கும் டெஸ்லா நிறுவனம் | Elon Musk Tesla Shares Lost Their Value

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, அவருடன் நெருக்கமாக இவர் பணியாற்றத் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் டெஸ்லா பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 17ம் திகதி டெஸ்லா பங்குகள் ஒன்றின் விலை 479.86 டொலர் என இருந்தது, தற்போது அதன் சந்தை மதிப்பில் 800 பில்லியன் டொலர் அளவுக்கு பேரிழப்பை சந்தித்துள்ளது.

ஆயுத இறக்குமதியை அதிகரித்த ஐரோப்பா: உலகிலேயே முதலிடத்தில் இந்த நாடு

ஆயுத இறக்குமதியை அதிகரித்த ஐரோப்பா: உலகிலேயே முதலிடத்தில் இந்த நாடு

திங்களன்று டெஸ்லா பங்குகளுக்கு எட்டாவது மிக மோசமான நாளாக பதிவாகியுள்ளது. மேலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை, திங்கட்கிழமை டெஸ்லாவின் பங்குச் சரிவுக்கு முதன்மை காரணமாக இருந்தது.

சரிவுக்கு காரணமாக

கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரி விதிப்பு மிரட்டல்களும் டெஸ்லா பங்குகளில் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மட்டுமின்றி, கூடுதல் வரிகள் மற்றும் சாத்தியமான வர்த்தகப் போர் ஆகியவை உற்பத்தியைப் பாதித்து விலைகளை உயர்த்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ட்ரம்புடன் கூட்டு சேர்ந்த எலோன் மஸ்க்... கடும் வீழ்ச்சியை சந்திக்கும் டெஸ்லா நிறுவனம் | Elon Musk Tesla Shares Lost Their Value

மஸ்க்கின் சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்துடனான அவரது நெருக்கம், அத்துடன் மஸ்க் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகம் உள்ளிட்டவை டெஸ்லாவின் நன்மதிப்பை சிதைத்து வருகிறது.

இதற்கிடையில், மஸ்க் தனது சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியைப் பற்றிய தவறான ரஷ்ய ஆதரவு கதைகளைப் பரப்பி வருகிறார்.

அத்துடன் அமெரிக்கா முழுவதும் டெஸ்லா நிறுவனங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் எலோன் மஸ்க் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரம்புடன் கூட்டு சேர்ந்த எலோன் மஸ்க்... கடும் வீழ்ச்சியை சந்திக்கும் டெஸ்லா நிறுவனம் | Elon Musk Tesla Shares Lost Their Value

டெஸ்லா வாகனங்கள் மற்றும் நிறுவனத்தை இலக்காகக் கொண்டு வன்முறைக்கிளர்ச்சிகள் மற்றும் தீ வைப்பு முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் ஐரோப்பாவில் டெஸ்லாவின் புதிய கார் விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவிகித வீழ்ச்சிக்கு காரணம் அந்த நிறுவனத்தின் மீதான வெறுப்பு என பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆய்வாளர்கள் திங்களன்று வெளிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US