எலன் மஸ்க் போட்ட ஒற்றை ட்வீட்! மீண்டும் மதிப்பு கூடிய Shiba Inu கிரிப்டோகரன்சி
டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் இன்று மீண்டும் ஒரு ட்வீட் செய்த காரணத்தால், Shiba Inu காயின் மதிப்பு ஏற்றத்தை சந்தித்துள்ளது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஜப்பானிய நாய் ஷிபா இனு/ஜோக் கிரிப்டோகரன்சியின் Text Art படத்தை ரொக்கெட் கப்பலுடன் நிற்பது போல் ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
மஸ்கின் இந்த ட்வீட் நிச்சயமாக கிரிப்டோவை சரியான மாற்றத்தை காட்டியது. ஏனெனில் அவரது டீவீட்டுக்கு பிறகு Shiba Inu காயினின் மதிப்பு 21 சதவீதம் அதிகரித்தது.
அதுமட்டுமின்றி ஃப்ளோகி இனுவின் (Floki Inu) விலையும் கணிசமாக அதிகரித்தது.
(\_/)
— Elon Musk (@elonmusk) October 17, 2021
( •_•)
/ >?
Shiba Inu, 2020-ஆம் ஆண்டில் "Riyoshi" என்பவரால் உருவாக்கப்பட்டது, முதலில் இது 2013-ஆம் ஆண்டு இணையத்தல் வைரலான டோஜ் மீம் (Doge meme) அடிப்படையிலான ஒரு ஜோக் கிரிப்டோகரன்சியாக உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் ஷிபா முதன்முதலில் ஒரு பெரிய விலை உயர்வை கண்டது, மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
தற்போது, எலன் மிஸ்கின் டிவீட்களால் இந்த காயின் விலை மீண்டும் அவ்வப்போது ஏற்றத்தை கண்டுவருகிறது.
BREAKING: Shiba Inu Coin $SHIB has now surged over 21% after Elon Musks Tweet. pic.twitter.com/VlB8B2fuWh
— Mr. Whale (@CryptoWhale) October 17, 2021