அமெரிக்க மக்கள் மாற்றத்திற்கான ஆணையை டிரம்பிடம் கொடுத்தார்கள் - எலான் மஸ்க்
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து எலான் மஸ்க் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
டிரம்ப் முன்னிலை
சர்வதேச அளவில் உற்றுநோக்கும் தேர்தலாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மாறியுள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், டொனால்டு டிரம்ப் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தேர்தல் தொடர்பில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அவர், டிரம்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு "அமெரிக்காவின் எதிர்காலம் தீயாய் இருக்கப் போகிறது" என தெரிவித்துள்ளார்.
🇺🇸🇺🇸The future is gonna be so 🔥 🇺🇸🇺🇸 pic.twitter.com/x56cqb6oT5
— Elon Musk (@elonmusk) November 6, 2024
ஆணையை கொடுத்தார்கள்
அதேபோல் மற்றொரு பதிவில், "அமெரிக்கா கட்டுபவர்களின் தேசமாக விரைவில் ஆக போகிறது, நீங்கள் அதற்கு சுதந்திரமாக இருப்பீர்கள்" என கூறியுள்ளார்.
மேலும், "அமெரிக்க மக்கள் டிரம்பிடம் இன்றிரவு மாற்றத்திற்கான தெளிவான ஆணையை கொடுத்தார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
The people of America gave @realDonaldTrump a crystal clear mandate for change tonight
— Elon Musk (@elonmusk) November 6, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |