'2023 முடியும் வரைதான் தான் நான்..' ட்விட்டருக்கு புதிய CEO-வை நியமிக்க மஸ்க் திட்டம்!
எலோன் மஸ்க் 2023 இறுதிக்குள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக வேறொரு நபரை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதி வரை தான்..
துபாயில் புதன்கிழமை நடந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக மஸ்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த ஆண்டின் இறுதி வரை தான் ட்விட்டரின் தலைமை நிர்வாக பொறுப்பில் இருக்கப்போவதாகவும், பின்னர் புதிய CEO-வை நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், ட்விட்டரை புதிய தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு முன், அதில் பல விடயங்களை சரி செய்ய வேண்டும் என்றும், அதற்கு இந்தாண்டு முழுவதையும் எடுத்துக்கொள்ளவுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
Karim Sahib | AFP | Getty Images
ட்விட்டரை நிலைப்படுத்த வேண்டும்
அவர் கூறியதாவது, ”நான் நிறுவனத்தை நிலைப்படுத்த வேண்டும் மற்றும் அது நிதி ரீதியாக ஆரோக்கியமான இடத்தில் இருப்பதையும், தயாரிப்பு ரோடுமேப் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை நடத்துவதற்கு வேறொருவரைக் கண்டுபிடிப்பதற்கு நல்ல நேரமாக இருக்கும் என்று நான் யூகிக்கிறேன், ஏனெனில் இது இந்த ஆண்டின் இறுதியில் ஒரு நிலையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
Mike Blake | Reuters
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கிய பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் பொறுப்பேற்றார்.
பின்னர் சில வாரங்களில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நிரந்தரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இறுதியில் வேறு ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைப்பார் என்றும் மஸ்க் கூறியது குறிப்பிடத்தக்கது.