ட்வீட்டில் இனி 10,000 எழுத்துகள் பயன்படுத்தலாம்: ட்விட்டரில் புதிய அப்டேட்கள் என்னென்ன?
ட்விட்டர் தளத்தில் ட்வீட் ஒன்றுக்கு அதிகப்பட்சமாக 10,000 எழுத்துகள் வரை பயன்படுத்தும் புதிய வசதியை சம்பந்தப்பட்ட ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ட்விட்டரில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்
உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஊடக தளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுடன், அதிலிருந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
அத்துடன் சரிபார்க்கப்பட்ட புளூ டிக் திட்டம், ட்விட்டரின் லோகோவை மாற்றியது போன்ற பல புதுமைகளை கடந்த சில மாதங்களாக எலான் மஸ்க் ட்விட்டரில் செய்து வருகிறார்.
இதற்கிடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய அப்டேட்
இந்நிலையில் ஒரு ட்வீட் ஒன்றுக்கு அதிகப்பட்சமாக 10,000 எழுத்துக்கள் வரை பயன்படுத்தும் புதிய வசதியை ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
Getty
மேலும் இதில் BOLD மற்றும் italic வடிவங்களில் ட்வீட்களின் எழுத்துகளை அமைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் ட்விட்டர் புளூ டிக் சந்தா செலுத்தியவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.