இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய எலோன் மஸ்க் - விரைவில் வரவுள்ள ‘Starlink’ சேவை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று எலோன் மஸ்க் இந்த ஆண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை வரவுள்ள எலோன் மஸ்க்
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் ‘Starlink’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எலோன் மஸ்க்கும் கலந்துரையாடியுள்ளனர்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பில்லியனர் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலிக்கு சென்றுள்ளார்.
Starlink சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு எலோன் மஸ்க் விண்ணப்பம் அனுப்பியிருந்தார், மேலும் அந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மஸ்க்கின் இலங்கை விஜயத்தின் சரியான திகதிகள் தற்போது வரை நிர்ணயிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் எலோனின் குழுவுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |