ஐரோப்பாவை பலவீனப்படுத்த திட்டமிடும் எலோன் மஸ்க்... ஜேர்மனி பகிரங்கக் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் ஐரோப்பாவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதாக ஜேர்மனியின் பிரதி சேன்ஸலரான Robert Habeck தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட செயல்
ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியை எலோன் மஸ்க் ஆதரிப்பது என்பது ஐரோப்பாவை பலவீனப்படுத்தும் ஒருவகையான திட்டமிட்ட செயல் என்றும் தமது புத்தாண்டு செய்திக்குறிப்பில் ராபர்ட் ஹேபெக் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் சேன்ஸலர் வேட்பாளராக களமிறங்கவிருக்கும் ராபர்ட் ஹேபெக், அறியாமையால் AfD கட்சியை எலோன் மஸ்க் ஆதரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார்.
ஐரோப்பாவை பலவீனப்படுத்துபவர்களை எலோன் மஸ்க் ஆதரிக்கிறார் என குறிப்பிட்டுள்ள ஹேபெக், ஒழுங்குமுறை என்பது அதிகாரத்தின் பொருத்தமற்ற வரம்பு என நம்புவோர்களின் விருப்பமே பலவீனமான ஐரோப்பா என்றும் ஹேபெக் தெரிவித்துள்ளார்.
பலவீனப்படுத்த முயற்சி
இதனிடையே, சமூக ஊடக உரிமையாளரும் டெஸ்லா நிறுவனருமான எலோன் மஸ்க் ஜேர்மன் பொதுத்தேர்தலை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்கிறார் என ஜேர்மன் அரசாங்கம் பகிரங்கமாகவே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க், நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக சுமார் 250 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |