போட்டி நல்லது தான், ஆனால் திருடுவது சரியல்ல! திரெட்ஸுக்கு எதிராக வழக்கு தொடரும் எலான் மஸ்க்
மார்க் ஜுக்கர்பெர்க்கின் த்ரெட்ஸுக்கு எதிராக ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் வழக்கு தொடர உள்ளதாக செய்தி பரவி வருகிறது.
திரெட்ஸ் அறிமுகம்
ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 'த்ரெட்ஸ்' எனும் சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்.
Justin Sullivan/Getty Images
த்ரெட்ஸ் (Threads) அறிமுகமான இரண்டு மணிநேரத்தில் 20 லட்சம் பயனாளர்கள் இணைந்தனர். அத்துடன் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே திரெட்ஸ் முதலிடம் வகித்தது.
இந்நிலையில் ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் ஒரு பதிவில் 'போட்டி நல்லது தான், ஆனால் திருடுவது சரியல்ல' என கூறியுள்ளார். அதாவது, ட்விட்டரின் பல அம்சங்கள் த்ரெட்ஸில் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Competition is fine, cheating is not
— Elon Musk (@elonmusk) July 6, 2023
சட்ட நடவடிக்கை
மேலும், ட்விட்டரின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ Text அடிப்படையிலான த்ரெட்ஸ் பயன்பாட்டில் மெட்டா பிளாட்ஃபார்ம்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் அனுப்பியதாக Semafor வியாழக்கிழமை கூறியது.
அத்துடன், த்ரெட்ஸ் -ஐ Copycat செயலி என குறிப்பிடும் அலெக்ஸ் ஸ்பிரோ, அதனை உருவாக்க முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை மெட்டா சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
Dado Ruvic/Reuters
ஆனால் மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், 'த்ரெட்ஸ் பொறியியல் குழுவில் உள்ள யாரும் முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் அல்ல - அது விடயமே அல்ல' என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் டொலர்களுக்கு ட்விட்டரை வாங்கியதில் இருந்து, அவரது கடுமையான மேற்பார்வையில் இருந்து தப்பிக்க பலரும் Twitterக்கான மாற்றினை தேடும் நேரத்தில் Threads அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
Nathan Laine/Bloomberg
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |