3800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்விட்டர்? உலக பணக்காரரின் திட்டம்
எலான் மாஸ்க் கடந்த வியாழக்கிழமை 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்
மஸ்க் ஏற்கனவே உயர்மட்ட நிர்வாகிகளை பணிநீக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
எலான் மஸ்க் 3800 ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
Blue Tick-ஐ தக்க வைத்திருக்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என வெளியான தகவல் ட்விட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
Carina Johansen / NTB / AFP/ Getty Images / Getty Images
இந்த நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் 3800 பேரை மஸ்க் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஊழியர்களை வீட்டிலிருந்து நிரந்தரமாக வேலை செய்ய அனுமதிக்கும் ட்விட்டரின் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மஸ்க் விரைவில் ஆலோசகர்களை சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.