இந்திய அரசுக்கு எதிராக எலான் மஸ்க்கின் X நிறுவனம் வழக்கு - என்ன காரணம்?
எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய அரசு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எக்ஸ் நிறுவனம் வழக்கு
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் X (எக்ஸ்) சமூகவலைத்தளத்தில் உரிமையாளர் ஆவார்.
தற்போது எக்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்திய அரசு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் Gork AI, பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் குறித்து, எக்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இதனையடுத்தே எக்ஸ் தளம் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒழுங்குபடுத்தப்படாத தணிக்கை முறை
இந்த மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79(3)(b) மற்றும் Sahyog தளத்தை பயன்படுத்தி, ஒழுங்குபடுத்தப்படாத தணிக்கை முறைகளை மத்திய அரசு பின்பற்றுவதாகவும், இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.
சமூகவலைத்தளத்தில் உள்ள உள்ளடங்களை அரசு நீக்க வேண்டும் என்றால் பிரிவு 69Aஇன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மட்டுமே நீக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், உள்ளடக்கத்தை நீக்குவது தொடர்பாக, அரசு தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சட்டப் பிரிவு 79(3)(b) பயன்படுத்தப்படுகிறது.
79(3)(b)-ன்படி, 36 மணி நேரத்துக்குள் அரசின் அறிவிப்புக்கு இணங்கத் தவறினால், பிரிவு 79(1) இன் கீழ் அது தனக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பை இழக்க நேரிடுவதோடு, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) உட்பட பல்வேறு சட்டங்களின் கீழ் பொறுப்பேற்க நேரிடும்.
சட்டப் பிரிவு 79(3)(b), சட்டப் பிரிவு 69A-க்கு முரணாக உள்ளதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி, இணையத்தில், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துவதாகவும் உள்ளது.
Sahyog தளம்
மேலும், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு இடையே உள்ளடக்கத்தை அகற்றும் கோரிக்கைகள் மற்றும் நேரடி தகவல்தொடர்புகளை எளிதாக்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் Sahyog தளத்தை உருவாக்கியது.
அரசு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை செயல்படுத்த அனைத்து சமூக வலைத்தளங்களும் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் எக்ஸ் நிறுவனம் இந்த மனுவில் எதிர்த்துள்ளது.
நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் இணைய உரையாடலில் அரசாங்கம் தனது பிடியை இறுக்க இந்த தளத்தை பயன்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், பிரிவு 79(3)(b) மூலம் கன்டென்ட்களை நீக்க உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை எனவும், இதுவரை இந்த பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைச் செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |