உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு
டெஸ்லா மற்றும் Space X நிறுவனங்களின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க், வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரராக உள்ளார்.
திறமைக்கு முன்னுரிமை
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள், சொத்து மதிப்பில் இனி எவரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலோன் மஸ்க், தற்போது உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகவும் உள்ளார்.
மிக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க், கவர்ச்சியான பட்டப்படிப்புகள் அல்ல திறமையானவர்களை மட்டுமே தாம் வேலைக்கு தெரிவு செய்ய இருப்பதாக குறிப்பிட்டு, கவனம் பெற்றார்.
திறமைக்கு முன்னுரிமை என எலோன் மஸ்க் வெளிப்படையாக பேசுவது இது முதல் முறை அல்ல. சிக்கல்களுக்கு தீர்வு காணும் கல்வி முறையே சிறந்தது என வாதிடுபவர் எலோன் மஸ்க்.
கனேடிய தாயாருக்கும் தென்னாப்பிரிக்க தந்தைக்கும் மகனாகப் பிறந்தவர் எலோன் மஸ்க். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எலோன் மஸ்க் Waterkloof House Preparatory பாடசாலை, Bryanston பாடசாலை மற்றும் Pretoria Boys பாடசாலை ஆகியவற்றில் தமது கல்வியை முடித்துள்ளார்.
தொடர்ந்து அமெரிக்காவில் குடியேறும் பொருட்டு, தனது கனேடிய தாயார் மூலமாக கனடாவில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். 1988ல் கனேடிய கடவுச்சீட்டும் கைப்பற்றியுள்ளார். கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் போதே பிரிட்டோரியா பல்கலைக்கழகத்திலும் இணைந்துள்ளார்.
1989 ஜூன் மாதம் கனடாவில் நுழைந்த எலோன் மஸ்க் Saskatchewan பகுதியில் வசித்து வந்ததுடன் விவசாயம், மரம் வெட்டுதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்தார்.
அத்துடன் ஒன்ராறியோவின் கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் 1992 ல் பிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.
400 பில்லியன் டொலர்
1997 ல் ஐவி லீக் கல்வி நிறுவனத்தில் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டதாரி பள்ளியில் சேர்ந்த எலோன் மஸ்க், இரண்டே நாளில் அந்த முடிவை கைவிட்டு வெளியேறினார்.
இதனையடுத்து அதே ஆண்டில், Zip2 என்ற நிறுவனத்தை முதல் முறையாக தொடங்கினார். 1999ல் இந்த நிறுவனத்தை Compaq நிறுவனம் வாங்கிக்கொண்டது. இந்த நிறுவனமே பின்னாளில் எலோன் மஸ்குடன் இணைந்து PayPal என மாற்றம் கண்டது.
2002ல் Space X நிறுவனத்தை தொடங்கிய எலோன் மஸ்க், 2004ல் டெஸ்லா நிறுவனத்தை தொடங்கினார். 2008ல் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.
2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் எலோன் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 110 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்யும் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு 2027ல் 1 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |