ட்விட்டர் நிறுவனத்தின் மேலதிகாரிகளை நூதன முறையில் பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி தலைமை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
பணியாளர்கள் நீக்கம்
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பதவியேற்ற பிறகு ட்விட்டர் நிறுவனம் பல சரிவுகளை சந்தித்து வருகிறது. நிறைய ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு மட்டுமில்லாமல் அதன் சமூக வலைத்தள ஊடகத்திலும் பெரிதாக வருவாய் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
@The Associated Press
மேலும் நிறுவனத்தின் 70 சதவிகித ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
நூதன முறையில் பணி நீக்கம்
ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை எலான் மஸ்க் எப்படி பணிநீக்கம் செய்கிறார் என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளிடம் தங்களது குழுக்களிலிருக்கும் சிறந்த ஊழியர்களது பட்டியலை கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். தலைமை அதிகாரிகளும் அந்த பட்டியலைத் தயார் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
@GETTY IMAGES
அந்த பட்டியலிலிருந்த ஊழியர்களுக்கு உயர் பதவிக் கொடுத்த எலான் மஸ்க், அந்த பட்டியலை கொடுத்த எல்லா தலைமை நிர்வாகிகளையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் செலவை குறைக்க அதிக சம்பளம் வாங்கும் பழைய ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய தயாராக இருக்கும் ஊழியர்களுக்கு உயர் பதவிக் கொடுத்துள்ளார்.
முந்தைய மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிக ஊதியம் பெறுகிறார்களே ஒழிய, நிறுவனத்தின் வெற்றிக்கு போதுமான பங்களிப்பை வழங்கவில்லை என்று எலான் மஸ்கின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.