+2 மாணவர்களுக்கு இமெயில் முகவரி தொடங்க உத்தரவு
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இமெயில் முகவரி உருவாக்க வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனரகம் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கு, ஆன்லைன் வழியே தான் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு பெரும்பாலான கல்லுாரிகள், மாணவர்களின் இ- மெயில் முகவரியை பெறுகின்றன. எனவே, மாணவர்களுக்கு இ -மெயில் முகவரி இருத்தல் முக்கியம்.
எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இ -மெயில் முகவரியை உருவாக்க, வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இ - மெயில் முகவரியை, பள்ளிக்கல்வியின் எமிஸ் மாணவர் விபரங்களுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |