இளவரசர் ஆண்ட்ரூ மீது மீண்டும் ஒரு மோசமான குற்றச்சாட்டு: ஆதாரம் வெளியானது
பிரித்தானிய முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ, மோசமான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.
இந்நிலையில், ஆண்ட்ரூ குறித்த புதிய தகவல் ஒன்றும், அதற்கான ஆதாரமும் வெளியாகியுள்ளன.
சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரூவால் தலைக்குனிவு
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.
ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவரும் அவரது முன்னாள் மனைவியும் தாங்கள் வாழும் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ மீது மீண்டும் ஒரு மோசமான குற்றச்சாட்டு
அந்த காலகட்டத்தில், எப்ஸ்டீனுடைய மாளிகையில் விருந்துக்குச் சென்ற ஆண்ட்ரூ, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் 17 வயது பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக பின்னாட்களில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில், ஆண்ட்ரூ தொடர்பில் மீண்டும் ஒரு மோசமான தகவல் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் அவர் குறித்த ஏராளமான தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவற்றில் ஒன்றில், ஆண்ட்ரூவுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று வெளியாகியுள்ளது.

2010ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11ஆம் திகதி எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், 26 வயது ரஷ்ய இளம்பெண் ஒருவரை ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் எப்ஸ்டீன்.
அவரது மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஆண்ட்ரூ, தான் ஐரினா என்னும் அந்த ரஷ்ய இளம்பெண்ணை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2010ஆம் ஆண்டில், ஆண்ட்ரூவும் எப்ஸ்டீனும் நியூயார்க்கில் சேர்ந்து நடமாடும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்த ஆண்ட்ரூ, தான் 2010ஆம் ஆண்டு எப்ஸ்டீனை சந்தித்தது, அவருடனான உறவைத் துண்டிக்கத்தான் என கூறியிருந்தார்.
அதாவது, எப்ஸ்டீன் மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இனி இருவரும் சந்திப்பது முறையாக இருக்காது என்பதை தெரிவித்து, அவருடனான உறவைத் துண்டிப்பதற்காகவே தான் எப்ஸ்டீனை சந்தித்ததாக தெரிவித்திருந்தார் ஆண்ட்ரூ.

ஆனால், அதற்குப் பின்னும் இருவரும் தொடர்பிலிருந்ததை நிரூபிக்கும் மின்னஞ்சல்கள் பல தற்போது வெளியாகியுள்ளன.
ஏற்கனவே எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது தான் வாழ்ந்த வீட்டிலிருந்தும் வெளியேற்றப்படும் நிலையை அடைந்துள்ள ஆண்ட்ரூ மீது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ தெரியாது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |