Universal Credit... அவசரத் தேவைக்கு 1000 பவுண்டுகள் கடனாகப் பெறலாம்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அவசரத் தேவைகளுக்காக பிரித்தானியர்கள் Universal Credit-ல் இருந்து கடன் பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Universal Credit-ல் இருந்து முதல் தவணைக்காக காத்திருப்பவர்கள், 1,000 பவுண்டுகள் வட்டியில்லா கடன் பெறலாம் என தெரியவந்துள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத இந்தத் திட்டமானது, தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறுகின்றனர்.
பிஞ்சு குழந்தைகளுடன் இருக்கும் தாய்மார்கள், அல்லது அவசரத் தேவை காரணமாக பணம் தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கடந்த அக்டோபரில் இருந்தே, Universal Credit-ல் இருந்து மக்களுக்கு உதவி கிடைப்பதில்லை.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வாரம் 20 பவுண்டுகள் அளிக்கப்பட்டு வந்ததை, போரிஸ் அரசாங்கம் ரத்து செய்தது. தற்போது எரிபொருளுக்கும் உணவுக்கும் அப்பாவி மக்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், Universal Credit-ல் உதவி பெறுபவர்கள் ஐந்து வாரங்கள் வரையில் காத்திருக்கும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் 1,000 பவுண்டுகள் வரையில் வட்டியில்லா கடனாக பெறவும், தவணையாக திருப்பி செலுத்தும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த 3 நாட்களில் பணம் அளிக்கப்படும் எனவும், Universal Credit-ல் உரிமை கோருபவர்களுக்கு வேலை கிடைத்து, அவர்கள் உதவியை ரத்து செய்தாலும், தற்போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தாரர்களுக்கு உடனையே பணம் கிடைக்காது எனவும், உரிய காரணம் முன்வைக்கப்பட்டு, கடனை திருப்பி செலுத்த முடியும் என நிரூபிக்கப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு முறையும் எவ்வளவு திருப்பி செலுத்த முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.