பிரெஞ்சு நகரங்களுக்கு கடல் அரிப்பால் அவசர அபாயம்: பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
கடல் அரிப்பால் அதிக அபாயத்தில் உள்ள நகரங்களின் பட்டியல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் அரசின் சமீபத்திய அறிக்கை ஒன்று, 126 முனிசிபாலிட்டிகளுக்கு, அல்லது வேறு வகையில் கூறினால், பிரெஞ்சு கடற்கரையின் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு உள்ள நிலப்பரப்புக்கு, கடல் அரிப்பால் அதிக அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலான இடங்கள் நாட்டின் மேற்குக் கரையில் அமைந்துள்ளன. பிரிட்டனியில் 41 இடங்களுக்கும், நார்மண்டியில் 16 இடங்களுக்கும், New Aquitaine உள்ள 31 இடங்களுக்கும் அதிக அபாயம் உள்ளதாம்.
மொதத்தில் 864 முனிசிபாலிட்டிகள் எளிதில் பாதிக்கப்படும் இடங்களாகவும், 126 இடங்கள் அதிக அபாயத்தில் உள்ள இடங்களாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
பிரான்சில் வாழும் மக்களில் 1.5 மில்லியன் மக்கள் இந்த பகுதிகளில் வாழ்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால், அவர்கள் எளிதில் கடுமையான புயல் மற்றும் பெருவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் வாழ்கிறார்கள் என்பதாகும்.
கடல் அரிப்பு எதனால் ஏற்படுகிறது?
இந்த கடல் அரிப்பு என்பது, பொதுவாக, உலகில் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படுகிறது. கடற்கரை உறுதியான கற்களால் ஆனதா அல்லது மென்மையான மணலால் ஆனதா என்னும் விடயம், கடற்கரை அரிக்கப்படும் வேகத்தை நிர்ணயிக்கின்றது.
Le gouvernement a publié les noms des 126 communes françaises qui auront l'obligation de s'adapter en priorité à l'érosion du littoral aggravée par le réchauffement climatique et la pression humaine ⬇️ #AFP #AFPGraphics pic.twitter.com/D1jvPObwYd
— Agence France-Presse (@afpfr) May 4, 2022
? #MontéeDesEaux
— franceinfo plus (@franceinfoplus) October 29, 2021
Votre ville ou votre plage sont-elles menacées par le réchauffement climatique ?
?https://t.co/l6gCFXQZC7 pic.twitter.com/S2s3kxggVH
Cette carte publiée par l'Agence européenne de l'environnement en 2020 détaille les zones littorales françaises les plus exposées à la montée de niveau de la mer. pic.twitter.com/LqG6XQVhY1
— Samuel GREE (@SamuelGREE1) August 12, 2021
Comment l’érosion fait disparaître nos plages >> https://t.co/GFNF18UwQo #littoral pic.twitter.com/dMTJPZKdNx
— Le Parisien | infographies (@leparisieninfog) August 15, 2019