கனேடிய பூர்வக்குடியினர் குடியிருப்பு ஒன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: காரணம் என்ன?
கனேடிய பூர்வக்குடியின குடியிருப்பு ஒன்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது...
அதற்குக் காரணம், அங்கு கொரோனா பரவிவருவதுதான்!
Kasabonika Lake என்னும் அந்த பூர்வக் குடியினர் குடியிருப்பில் 1060 பேர் வாழ்கிறார்கள். அந்த 1060 பேரில் 138 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இன்னமும் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் அங்கு கொரோனாவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். மூன்று பேர் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, மூன்று வாரங்களுக்கு அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினர் மட்டும் ஓய்வின்றி, இரவு பகலாக கொரோனா நோயாளிகளுக்காக உழைத்துவருகிறார்கள்.
Kasabonika Lake பூர்வக்குடியின குடியிருப்பு தண்ணீருக்கு நடுவில் அமைந்துள்ளதால், குளிர்காலத்தில் பனி உறையும்போது அந்த பனியைத்தான் சாலை போல பயன்படுத்தி அங்கு செல்ல முடியும். அல்லது விமானம் மூலம் மட்டுமே Kasabonika Lake First Nationஐச் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.