நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை விடுத்த அரசு: காரணம் என்ன?
இந்தியா முழுவதும் உள்ள செல்போன் பயனர்களுக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பியதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திடீர் Vibration
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டத்தை இன்று நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சத்தம் தான் அனைவரது தொலைப்பேசியில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து தொலைபேசிகளுக்கும் இயற்கை அனர்த்தம் குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம், பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க இது பயன்படுத்தப்படவிருகின்றது.
இந்த சோதனையின் போது மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |