ஜேர்மனி வழங்கும் மூன்று மாத அவசரகால விசா: உள்துறை அமைச்சர் தகவல்
துருகி மற்றும் சிரியாவில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜேர்மனியில் வாழும் பட்சத்தில், அவர்கள் ஜேர்மனிக்கு வர மூன்று மாத விசா வழங்க இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு அவசர கால உதவி
இந்த விசா குறித்துப் பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, இது ஒரு அவசரகால உதவி என்று கூறியுள்ளார்.
ஜேர்மனியில் வாழும் துருக்கி மற்றும் சிரிய குடும்பங்கள், தங்களுக்கு நெருக்கமான உறவினர்களை அழைத்துக்கொள்ள அனுமதியளிக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், 25,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்டது. அந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமும், மருத்துவ சிகிச்சையும் ஜேர்மனியில் கிடைக்கச் செய்வதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார், ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser.
ஜேர்மனியில், சுமார் 2.9 மில்லியன் துருக்கி நாட்டுப் பின்னணிகொண்டவர்கள் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.