வளரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!
இலங்கை ஏ எதிரான வளர்ந்து வரும் அணிகளான ஆசிய கோப்பை 2024 போட்டியில், ஆப்கானிஸ்தான் ஏ 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வளர்ந்து வரும் அணிகளான ஆசிய கோப்பை 2024
வளர்ந்து வரும் அணிகளான டி20 ஆசிய கோப்பை 2024-யின் இன்றைய போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Innings break: Sri Lanka 'A' post 133/7 at the end of 20 overs. Time to defend this ? #SLvAFG pic.twitter.com/MQ8Le7BfVj
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 27, 2024
இலங்கை அணியின் முதன்மை வீரர்கள் யசோதா லங்கா(1), லஹிரு உதாரா(5), சொற்ப ஓட்டங்களில் வெளியேறவே அணி மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இருப்பினும் அணியின் வீழ்ச்சியை மீட்டெடுக்க போராடிய சஹான் ஆராச்சிகே(Sahan Arachchige) 47 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தது.
ஆப்கானிஸ்தான் வெற்றி
வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே வலுவான தொடக்கம் அமைத்தனர்.
செடிகுல்லா அடல்(55), கரீம் ஜனத்(33) என ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
ICYMI: #AfghanAbdalyan went past Sri Lanka A in the Grand Finale to Clinch their Maiden ACC Men’s Emerging Teams Asia Cup ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 27, 2024
?: https://t.co/JUFkFcLamW#AFGAvSLA | #MensT20EmergingTeamsAsiaCup | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/Z74u9lbBGn
இறுதியில் 18.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் குவித்தது. இதன் மூலம் இலங்கை ஏ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |