இளவரசர் வில்லியம் முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை... ஒரே நாளில் வாழ்த்து மழையில் திக்குமுக்காடும் இளம்பெண்
இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் என பல பிரபலங்களின் பாராட்டுக்களைப் பெற்று ஒரே நாளில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார் ஒரு பிரித்தானிய இளம்பெண்.
அவரது பெயர் எம்மா ரடுக்கானு (Emma Raducanu 18)!
கனடாவில் பிறந்த எம்மாவின் தந்தை ரொமேனிய வம்சாவளியையும், தாய் சீன வம்சாவளியையும் சேர்ந்தவர்கள். எம்மாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. ஐந்து வயதில் டென்னிஸ் பேட் பிடித்திருக்கிறார்.
இன்று பிரித்தானியா மட்டுமல்ல உலக டென்னிஸ் ரசிகர்கள் அனைவருமே எம்மா, எம்மா என்று கத்திக்கொண்டிருகிறார்கள்.
பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வரை சமூக ஊடகங்களில் எம்மாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
அதற்கு காரணம், எம்மா ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளதுதான்.
ஆம், வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 18 வயது பெண் அமெரிக்க ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார் என்றால், அது எம்மாதான்!
ஆகவேதான் அவருக்கு ராஜ குடும்பத்தினர் முதல் பொதுமக்கள் வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய வெற்றிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இறுதிச்சுற்றைக் காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்து, அதற்கும் முன்கூட்டியே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.