இஸ்ரேல் வந்தடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்ரேல் சென்றடைந்துள்ளார்.
இஸ்ரேல் வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி
இஸ்ரேலுடன் தாங்கள் நிற்கிறோம் என்பதை இஸ்ரேல் மக்களுக்கு காட்டுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் நிற்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காக, அவர் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை சந்திக்க இருக்கிறார்.
அதே நேரத்தில், இஸ்ரேல் காசாவில் தரைவழித்தாக்குதலுக்காக தயாராகிவருவதைத் தொடர்ந்து, காசாவிலிருக்கும் போதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் அழைப்பு விடுக்க இருக்கிறார் மேக்ரான்.
அத்துடன், இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog, எதிர்க்கட்சித் தலைவர்களான Benny Gantz மற்றும் Yair Lapid ஆகியோரையும் ஜெருசலேமில் சந்திக்க உள்ளார் மேக்ரான்.
Agencia EFE
ஹமாஸ் பிடியில் பிரான்ஸ் நாட்டவர்கள்
இந்நிலையில், அக்டோபர் 7ஆம் திகதியன்று, ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிணைக்கைதிகளாக சுமார் 200 பேரை பிடித்துச் சென்றதில், பிரான்ஸ் நாட்டவர்களும் இருக்கிறார்கள்.
Ahram Online
ஆகவே, அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க இருக்கிறார் மேக்ரான்.
இஸ்ரேலில் பிரான்ஸ் நாட்டவர்கள் ஏழு பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் ஒரு பெண், பிணைக்கைதிகளில் ஒருவராக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |