இமானுவல் மேக்ரான் ஐரோப்பாவின் அடுத்த தலைவரா?
ஐரோப்பாவின் வலிமையான நாடாக திகழ்ந்தது ஜேர்மனி. அதுவும், ஏஞ்சலா மெர்க்கல் தலைமையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திகழ்ந்த ஜேர்மனி, ஐரோப்பாவின் தலைவராக பார்க்கப்பட்டது.
ஆனால், ஏஞ்சலாவுக்குப்பின் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான அரசு கடந்துவந்த பாதை, ஜேர்மனியில் ஒளியை மங்கச் செய்துவிட்டது.
ஆக, ஐரோப்பாவின் அடுத்த தலைவர் யார் எனும் பேச்சு எழுந்துள்ளது.
இமானுவல் மேக்ரான் ஐரோப்பாவின் அடுத்த தலைவரா?
சமீப காலமாக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் ஐரோப்பாவின் முக்கிய தலைவராக உயர்ந்துவருகிறார்.
குறிப்பாக, வரிவிதிப்புகள் மற்றும் ஐரோப்பாவுக்கு எதிரான நிலைப்பாட்டால் ட்ரம்ப் உலகுக்கே அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், மேக்ரான் ஐரோப்பாவின் முக்கிய தலைவராக உயர்ந்துவருகிறார்.
ட்ரம்பின் கருத்துக்களுக்கு எதிராக தைரியமாக கருத்து தெரிவிக்கும் மேக்ரான், பிரான்சின் தலைவராகவும், அதே நேரத்தில் ஐரோப்பாவுக்கான ஒரு தூதுவராகவும் செயல்படுகிறார்.
உக்ரைன் விவகாரத்தில் குரல் கொடுத்ததுடன், தற்போது ட்ரம்பின் வரிவிதிப்பு விடயத்திலும் ஐரோப்பாவை முன்னிறுத்த விழைகிறார் அவர்.
சொல்லப்போனால், ரஷ்யா பிரச்சினை உருவாக்கும்பட்சத்தில், ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக தனது அணு ஆயுத பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறார் அவர்.
ஆக, இமானுவல் மேக்ரான் ஐரோப்பாவின் அடுத்த தலைவராக கருதப்படுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளதில் வியப்பில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |