புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்தப்போகிறேன்: பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், புலம்பெயர்தலைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும்
வரும் மாதங்களில் தான் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்போகிறேன் என்பது குறித்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் விளக்கிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், புலம்பெயர்தலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது தனது நோக்கம் என்றும், முதலில் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எப்படி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தப்போகிறார் என்பது குறித்து மேக்ரான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கனவே அரசு திட்டமிட்டுள்ள புலம்பெயர்தல் மசோதா ஒன்று, மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டுள்ளதால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் அறிமுகம் செய்ய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |