ஜேர்மனியின் ஒரு திட்டத்தை பின்பற்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருப்பம்
ஜேர்மனி வழங்கும் குறைந்த கட்டண ரயில் திட்டம் போன்றதொரு திட்டத்தை பிரான்சிலும் அமுல்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி தொடர்ச்சியாக பல்வேறு குறைந்த கட்டண ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது.
ஜேர்மனி 49 யூரோக்கள் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், வெறும் 10 யூரோ பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அதுவும் அமோக வரவேற்பைப் பெற்றது.
The Times of India
ரயிலில் பயணக்கட்டணம் குறைவாக இருப்பதால், பலர் தங்கள் வாகனங்களை விட்டு விட்டு ரயிலில் பயணிக்கத் துவங்குகிறார்கள். இதனால், நாட்டில் எரிபொருள் மிச்சமாவதுடன், காற்று மாசு ஏற்படுவதும் குறைகிறது. மக்களுக்கும் மகிழ்ச்சி. ஆகவேதான் அரசுகள் இதுபோல் சலுகை விலை பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதியின் விருப்பம்
ஜேர்மனியைப் போலவே, பிரான்ஸ் உள்ளூர் ரயில்களிலும் சலுகை விலை பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்ய விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சிலர், ஜேர்மனியைப் போலவே பிரான்சிலும் மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் மட்டுமே கட்டணம் கொண்ட ரயில் பயணச்சீட்டை அறிமுகம் செய்ய பிரான்ஸ் விரும்புகிறதா என்று கேட்டனர்.
தான் அந்த திட்டத்துக்கு ஆதரவாகவே உள்ளதாக தெரிவித்த மேக்ரான், இந்த திட்டத்தை பின்பற்ற விரும்பும் அனைத்து பகுதிகளிலும் அதை துவங்க தான் போக்குவரத்து அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |