பிரான்சில் பிரபல நடிகர் மீது குற்றம் சாட்டிய நடிகை தற்கொலை
பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்த நடிகை ஒருவர், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பிரெஞ்சு நடிகர் மீது குற்றச்சாட்டுகள்
2017ஆம் ஆண்டு, பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வே வெய்ன்ஸ்டீன் மீது அமெரிக்க நடிகையான அலிஸ்ஸா மிலானோ என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததைத் தொடர்ந்து, ’Me Too’ என்னும் விடயம் அதிகமாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவத்துவங்கியது.
Credit: AFP
அதன்பின், க்வென்னத் பால்ட்ரோ, ஆஷ்லீ ஜூட், ஜெனிஃபர் லாரன்ஸ், உமா துர்மன் என பல நடிகைகள் தங்கள் மீதான அத்துமீறல்களை வெளியுலகுக்குத் தெரிவித்தார்கள்.
அதே காலகட்டத்தில், 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம், பிரெஞ்சு நடிகையான Emmanuelle Debever என்பவர், தன்னிடம் பிரபல பிரெஞ்சு நடிகரான Gerard Depardieu அத்துமீறியதாக சமூக ஊடகம் ஒன்றில் கூறிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை செய்துகொண்ட நடிகை
அந்த நடிகை, சமீபத்தில், அதாவது இம்மாதம் (டிசம்பர்) 7ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டதாக பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதுவும், பல நடிகைகளிடம் Gerard Depardieu அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பான ஆவணப்படம் ஒன்று தொலைக்காட்சிகளில் வெளியான அதே நாளில் Emmanuelle Debever தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Credit: YouTube
1980களில் வேகமாக வளர்ந்துவந்த இளம் நடிகையான Emmanuelle Debever, 1982இல் Gerard Depardieuஉடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போதுதான் தன்னிடம் அவர் அத்துமீறியதாக அவர் பின்னர் குற்றம் சாட்டினார்.
அந்த சம்பவம் காரணமாகவோ என்னவோ, அதற்குப் பிறகு Emmanuelle Debever திரையுலகிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |