உலகக்கோப்பை வெற்றிக்கு ஒரு நொடி முன் மெஸ்ஸி உச்சரித்த உணர்ச்சிபூர்வமான 5 வார்த்தை!
2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியை தீர்மானித்த கடைசி பெனால்டி ஷூட்டுக்கு ஒரு நொடி முன்னதாக லியோனல் மெஸ்ஸி உணர்ச்சிகரமான 5 வார்த்தைகளை கிசுகிசுத்தார்.
அந்த ஒரு பரபரப்பான தருணத்தில் லியோனல் மெஸ்ஸி தனது பாட்டியை நினைவு கூர்ந்தார்.
மறைந்த பாட்டிக்கு அனுப்பிய செய்தி
அர்ஜென்டினா வெற்றிபெறுவதற்கு சற்று முன்பு மெஸ்ஸி தனது மறைந்த பாட்டிக்கு ஐந்து வார்த்தைகள் கொண்ட செய்தியை உச்சரித்ததாகத் தெரிகிறது.
Getty Images
உலகக்கோப்பை இறுதிப்போட்டி
கத்தார் 2022 FIFA உலகக்கோப்பையில், பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இடையே நடந்த இறுதிப்போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை இறுதியில் பெனால்டி ஷூட்அவுட் தான் முடிவு செய்தது.
பெனால்டி ஷூட்அவுட்களில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே இருவரும் தங்கள் அணியின் தொடக்க ஸ்பாட்-கிக்கை கோல்களாக மாற்றினர். அடுத்து, Aurelien Tchouameni மற்றும் Kingsley Coman இருவரும் தொடர்ச்சியாக கொலை தவறவிட்டதால் பிரான்சின் வெற்றி வாய்ப்பு முற்றிலும் குறைந்தது.
ஆனால், அர்ஜென்டினாவில் Gonzalo Montiel தனது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான பெனால்டி கிக்கை அடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றிக்கான அந்த கோலை அவர் அடிப்பதற்கு ஒரு நொடி முன், மெஸ்ஸி தனது மறைந்த பாட்டிக்கு அந்த செய்தியை கூறினார். அதை அவர் சற்று சத்தமாக கிசுகிசுத்தார்.
அவர் சொன்ன அந்த 5 வார்த்தை "அந்த நாள் இருதுவாக இருக்கலாம் பாட்டி" (it could be today grandma) என்று அவர் கூறினார்.
Messi diciendo "puede ser hoy abu" antes del penal de Montiel. ?? pic.twitter.com/8lBAoaQ0ps
— DOGOR ⭐⭐⭐ (@dogordo_) January 15, 2023
மறைந்த பாட்டிக்கு கொடுத்த வாக்குறுதி
மெஸ்ஸி தனது மறைந்த தாய்வழி பாட்டியான செலியா ஒலிவேரா குசிட்டினிக்கு ஒரு நிறைவேற்றப்படாத வாக்குறுதியை அளித்ததாகத் தெரிகிறது, அவர் 1998-ல் மெஸ்ஸிக்கு 11 வயதாக இருந்தபோது இறந்தார்.
டிசம்பர் 18 அன்று லுசைல் ஸ்டேடியத்தில் தனது ஐந்தாவது மற்றும் FIFA உலகக்கோப்பை வெற்றிக்கான கடைசி முயற்சியாக அதை நிறைவேற்றினார்.
இறுதிப்போட்டியின்போது அவர் கிசுகிசுக்க வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகிவருகிறது.