வெறும் 5 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கிய அரசு ஊழியர்! என்ன நடந்தது?
வெறும் 5 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 ரூபாய் லஞ்சம்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் நவீன் சந்திரா நகும்(46).
இவரிடம் அரசின் வருவாய் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர். அவர்களுக்கு இந்த ஆவணங்களை அளிப்பதற்கு ரூ.5 -யை லஞ்சமாக நவீன் கேட்டுள்ளார்.
விசிஇ படிவம், 7ஏ, 12 மற்றும் உரிமைக்கடிதம் 6 ஆகிய ஆவணத்திற்கு தலா ரூ.5 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்ததன் பேரில், ரசாயனம் தடவிய ரூபாயை ஏசிபி அதிகாரிகள் கொடுத்தனர்.
பின்னர், நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில் இந்த ரூபாயை விவசாயிகள் நவீனிடம் கொடுக்கும்போது, பதுங்கியிருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து ராஜ்கோட் ஏசிபி உதவி இயக்குநர் கே.எச்.கோஹில் கூறும்போது, " தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே கிராம பஞ்சாயத்து அலுவலக கணினி ஆபரேட்டராக நவீன் சந்திரா வேலை செய்துள்ளார்.
இவர், கடந்த 2013 -ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். அரசு ஆவணங்கள் கேட்கும் விவசாயிகளிடம், ஒவ்வொரு ஆவணத்திற்கும் 5 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |