ஜேர்மனியில் கொஞ்சம் கொஞ்சமாக 20 கிலோ தங்கம் திருடிய பணியாளர்... அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மோதிரம் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தொழிற்சாலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 20 கிலோ தங்கம் திருடியிருக்கிறார்.
அதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 34,74,28,137 ரூபாய்.
ஜேர்மனியிலுள்ள Pforzheim என்ற நகரில் அமைந்துள்ள, திருமணத்துக்கான தங்க மோதிரம் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியுள்ளார் ஒருவர்.
தினமும் வீட்டுக்கு வரும்போது, தங்க மோதிரம் செய்வதற்காக தங்கத்தை வெட்டும்போது விழும் துகள்களை தொழிற்சாலையிலிருந்து சுமார் இரண்டு ஆண்டுகளாக திருடிக் கொண்டு வந்துள்ளார் அவர்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக 20 கிலோ தங்கம் திருடியிருக்கிறார் அவர்.
அதன் மதிப்பு 960,000 யூரோக்கள், இலங்கை மதிப்பில் 34,74,28,137 ரூபாய்.
திருடிய தங்கத்தை தன் வீட்டில் வைத்து உருக்கி, தங்கக் கட்டிகளாக்கி அவற்றை விற்றுவந்துள்ளார் அவர். தங்கம் விற்ற பணத்தை தன் வீட்டில் ஒரு நீச்சல் குளம், தோட்டம் அமைத்தல் என பல விடயங்களுக்காக பயன்படுத்தியுள்ளார் அவர்.
தற்போது அவர் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில் பொலிசார் அவர் வீட்டை சோதனையிட்டபோது இலட்சக்கக்கணக்கான யூரோக்கள் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு மூன்று ஆண்டுகளும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
picture - alliance