ஒரே ஒரு வரியில் ராஜினாமா கடிதம் எழுதிய ஊழியர்.., வைரலாகும் அவரது வார்த்தை
ஒரே ஒரு வரியில் ராஜினாமா கடிதத்தை எழுதி வேலையை விட்டு வெளியேறிய ஊழியரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜினாமா கடிதம் வைரல்
மும்பையை தளமாகக் கொண்ட பிராண்டான ஹிங்லிஷின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுபம் குணே. இவர் சமூக வலைதளமான லிங்க்ட்இனில் மிகவும் வெளிப்படையான ராஜினாமா மின்னஞ்சலைப் பகிர்ந்து கொண்டார்.
இப்போது ஆன்லைனில் இருப்பவர்கள் இதை பற்றி தான் பேசி வருகிறார்கள். "நேர்மையான ராஜினாமா" என்று தலைப்பிடப்பட்ட இந்தப் பதிவில், சமூக ஊடக பயனர்களை சிரிக்க வைத்த மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட் காட்டப்பட்டுள்ளது.
அந்த பதிவில் ஊழியர், ''ஹாய் சார், மெயின் பிக் கயா. சாம்னே வாலி கம்பெனி சார் பைஸே ஜெயதா தே ரஹி ஹை (நான் விற்று விட்டேன். மற்ற நிறுவனம் இன்னும் கொஞ்சம் பணம் தருகிறது) அன்புடன், தயித்வா ஷா,'' என்று எழுதியுள்ளார்.
இந்த ராஜினாமா கடிதத்திற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பயனர் ஒருவர், " ராஜினாமா சூழ்நிலைக்கு ஒரு யோசனை கொடுத்தீர்கள்" என்று எழுதினார்.
மற்றொரு பயனர்," 4 பைசா கூடுதலாக வழங்குவதைத் தவிர, உண்மையான பிரச்சினை நச்சு சூழல் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |