மனைவியுடன் தொடங்கிய நிறுவனம்... ஒரே ஒரு முடிவால் கோடீஸ்வரர்களான 70 ஊழியர்கள்
இந்திய அமெரிக்கரான பெரும் கோடீஸ்வரர் ஒருவர் தமது மனைவியுடன் சேர்ந்து உருவாக்கிய நிறுவனத்தால் 70 ஊழியர்களை கோடீஸ்வரராக மாற்றியுள்ளார்.
70 ஊழியர்கள்
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய பெரும் கோடீஸ்வரர் மற்றும் Zscaler என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய் சௌத்ரி என்பவரே, தமது நிறுவனம் ஒன்றை விற்பனை செய்ததால், அதில் பணியாற்றிய 70 ஊழியர்கள் கோடீஸ்வரராக மாற காரணமானவர்.
1990களில் ஜெய் சௌத்ரி மற்றும் அவரது மனைவி ஜோதியும் இணைந்து SecureIT என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அதுவரையான தங்கள் சேமிப்பை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால் அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. அந்த நிறுவனமானது பெரும் வளர்ச்சியை எட்டியது. இதனால். தமது நிறுவனத்தின் வளர்ச்சியின் பங்கை தமது ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் முடிவு செய்தார்.
தமது முதலீட்டாளர்களின் ஆதரவுடன், தமது ஊழியர்கள் அனைவருக்கும் SecureIT நிறுவனத்தின் உரிமைப் பங்குகளை வழங்கினார். இந்த நிலையில், 1998ல் Verisign நிறுவனத்திற்கு தங்களின் SecureIT நிறுவனத்தை விற்பனை செய்ய செளத்ரி முடிவு செய்தார்.
பெரும் லாபத்தை ஈட்டியது
இந்த ஒற்றை முடிவு செளதரியின் எதிர்காலத்தை மட்டுமின்றி, மொத்தமுள்ள 80 ஊழியர்களில் 70 பேர்கள் கோடீஸ்வரராகும் நிலை உருவானது. அதாவது தமது நிறுவனத்தின் 87.5 சதவிகித ஊழியர்களும் பெருந்தொகை ஆதாயம் பெற்றனர்.
மட்டுமின்றி, SecureIT நிறுவனத்தை வாங்கியதால் Verisign நிறுவனத்தின் பங்குகளும் பெரும் லாபத்தை ஈட்டியது. இதுவும் செளத்ரி மற்றும் அவரது ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்தது. பலர் வீடு, கார் என சொந்தமாக்கினர்.
SecureIT நிறுவனத்தை விற்பனை செய்த பின்னர் செளத்ரி மேலும் நான்கு நிறுவனங்களை உருவாக்கினார். CoreHarbour, CipherTrust, AirDefence மற்றும், 2008ல் கடைசியாக Zscaler என்ற நிறுவனம்.
2018ல் Zscaler பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டதுடன் NASDAQ-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு 2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ஜெய் சௌத்ரியின் மொத்த சொத்து மதிப்பு என்பது சுமார் ரூ 10,000 கோடி (11.3 பில்லியன் டொலர்) என்றே கூறப்படுகிறது.
அவரும் குடும்பத்தினரும் Zscaler நிறுவனத்தில் டஹ்ற்போது 40 சதவிகித உரிமை கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |