தடுப்பூசி போடுங்க.. இல்லன்னா சம்பளம் கிடையாது! எந்த நாட்டில் தெரியுமா?
கனடாவில் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்று வரை குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் வைரஸ் தொற்று பயங்கர வேகமாக பரவி வருகின்றது. கொரோனாவிற்கு எதிராக சக்தி வாய்ந்த ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது.
இதனால் அனைத்து நாடுகளிலும் வசிக்கும் மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த கனடா அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பில், கனடா நாட்டில் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் கட்டாயம் சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
அது போல பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காட்ட வேண்டும். வருகின்ற ஆக்டோபர் 29ஆம் திகதிக்குள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.