அடுத்த 10 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் பணியாளர்கள் இப்படித்தான் பணி செய்வார்கள்: ஆய்வு முடிவுகள்
அடுத்த 10 ஆண்டுகளில், சுவிட்சர்லாந்தில் 40 சதவிகிதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தவண்ணம்தான் பணி செய்வார்கள் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
2001ஆம் ஆண்டு, 1சதவிகிதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்தார்கள். 2019இல் அந்த எண்ணிக்கை 25 சதவிகிதமாக உயர்ந்தது. பின்னர், கோவிட் தொற்று தோன்றியது.
2020இல், முதல் பொதுமுடக்கத்தின்போது, 50 சதவிகிதப் பணியாளர்கள் வீடுகளிலிருந்தவண்ணம் பணி செய்தார்கள்.
இப்போது பெரும்பாலானோர் அலுவலகங்களுக்குத் திரும்பிவிட்டார்கள் என்றாலும், பணி குறித்த மக்களுடைய, பார்வை, மனப்பான்மை மாறிவிட்டது.
ஆய்வு முடிவுகளின் கணிப்பு
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, பணிகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை காரணமாக, இனி பெரும்பாலான பணிகள் அலுவகத்தில் இல்லாமல் தூர இடங்களிலிருந்தே, அதாவது வீடுகளிலிருந்தே செய்யப்படும் என்று கூறுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில், 40 சதவிகிதம், அல்லது அதற்கு அதிகமான பணியாளர்கள், முழுமையாகவே வீடுகளிலிருந்தவண்ணமே பணி செய்வார்கள் என்கிறது அந்த ஆய்வு.