சுவிட்சர்லாந்தில் சில துறைகளில் 10,000க்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு: விவரம் செய்திக்குள்
புத்தாண்டு பிறந்துவிட்டது. ஆனாலும், சுவிட்சர்லாந்தில் பல்வேறு துறைகளிலும், பல்வேறு பகுதிகளிலும், பணியாளர் தட்டுப்பாடு தீரவில்லை.
சில துறைகளில் 10,000 பணியிடங்கள் வரை நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
எந்தெந்த துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது?
சுவிட்சர்லாந்தில், மருத்துவத்துறையில் மட்டுமே 15,790 பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களுக்கான தேவை அதிகம் காணப்படுகிறது.
அதற்கு அடுத்தபடியாக, கட்டுமானத் துறையில் 13,566 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Image by Darko Stojanovic from Pixabay
சில்லறை வர்த்தகம் மூன்றாவது இடத்திலுள்ளது. அத்துறையில் 12,761 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதைத் தொடர்ந்து, உணவகங்கள் மற்றும் ஹொட்டல் துறையில் 10,478 பணியிடங்கள் காலியாக உள்ளன.
சுவிட்சர்லாந்தின் எந்தெந்த பகுதிகளில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன?
சூரிச் மாகாணத்தில் 55,113 பணியிடங்களும், Bern மாகாணத்தில் 37,939 பணியிடங்களும் காலியாக உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக Aargau மாகாணத்தில் 20,350 பணியிடங்களும், அதைத் தொடர்ந்து Gallen மாகாணத்தில் 18,178 பணியிடங்களும், Lucerne மாகாணத்தில் 17,021 பணியிடங்களும் காலியாக உள்ளன.
பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் Vaud மாகாணத்தில், 9,517 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதுமட்டுமில்லை, 2025இல் ஏராளமானோர் பணி ஓய்வு பெற இருப்பதால், 340,000 பணியிடங்கள் காலியாக ஆக உள்ளன. ஆண்டொன்றிற்கு 50,000 திறன்மிகுப் பணியாளர்கள் புலம்பெயர்தல் மூலம் சுவிட்சர்லாந்துக்கு பணிகளுக்காக வந்தாலும், 2030வாக்கில், சுமார் 400,000 பணியிடங்கள் காலியாக இருக்கும் என்கிறது ஆய்வமைப்பு ஒன்றின் அறிக்கை.
தகுதியும் விருப்பமும் உடையோர், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |