வெறும் வயிற்றில்? அல்லது உணவுக்கு பின்?: எடையை குறைக்க சிறந்தது எது
நடைபயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு உடற்பயிற்சி ஆகும்.
நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம், தசை வலிமை, எடை மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவுகிறது.
ஒரு சிலர் உணவிற்கு பின் நடைபயிற்சிக்குச் செல்வார்கள். இன்னும் சிலர் வெறும் வயிற்றில் நடப்பதை விரும்புகிறார்கள்.
இவற்றில், எந்த முறையில் நடைபெயர்ச்சி செய்வதால் உடலில் அதிக கலோரிகளை எரிக்கமுடியும் என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.
வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி
ஒருவர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தில் இருக்கும்போது, எப்போதும் வெறும் வயிற்றில் நடப்பது தான் நல்லது.
ஒருவர் வெறும் வயிற்றில் நடக்கும்போது, உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை ஆற்றலுக்காக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எனவே, வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வதால் உடலில் அதிக கொழுப்பு எரியும், இதனால் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரத்தச் சர்க்கரைக் குறைவு, நீரிழப்பு, தலைச்சுற்றல், நடுக்கம் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது ஆபத்தானது.
ஏனெனில், ஆற்றலை வழங்க போதுமான கார்போஹைட்ரேட்டுகள் உடலில் இல்லை என்றால், உடல் குளுக்கோனோஜெனெசிஸ் எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. இது புரதத்தை எரிபொருளாக மாற்றுகிறது.
உணவுக்குப் பின் நடைப்பயிற்சி
உணவுக்குப் பிறகு நீங்கள் நடைப்பயிற்சி செய்யும்போது, உங்கள் உடல் ஆற்றலுக்காக நீங்கள் உட்கொண்ட உணவில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது.
உணவுக்குப் பிறகு செய்யும் நடைப்பயிற்சியின் போது, உங்கள் உடலில் எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றல் ஆதாரம் உள்ளது.
இதன் விளைவாக, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
வெறும் வயிற்றில் செய்யும் நடைப்பயிற்சியை ஒப்பிடும்போது அதிக கொழுப்பை எரிக்க முடியாது.
இருந்தாலும், சாப்பிட்ட பிறகு 10-15 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை மேம்படுத்த மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
எடை இழப்பிற்கு ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
மேலும், போதுமான தூக்கத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம்.
குறிப்பாக உணவு மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |