கொரோனா தொற்றின் முடிவு கண்ணில் தெரிகிறது... ஜேர்மனியின் முன்னணி அறிவியலாளர்
ஜேர்மனியில் கொரோனா தொற்றின் முடிவு கண்ணில் தெரிகிறது என்று கூறியுள்ளார் ஜேர்மன் மூத்த அறிவியலாளர் ஒருவர்.
ஜேர்மனியின் பிரபல வைரஸ் துறை நிபுணரான Christian Drosten, இந்த ஆண்டுக்குள் ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார். ஜேர்மனியில் pandemic என்ற நிலை மாறி, endemic என்ற நிலை அறிவிக்கப்படும் நிலை விரைவில் வருமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நாம் அதற்கான நடவடிக்கையில் இருக்கிறோம் என்று கூறிய Drosten, ஆனாலும், வயது முதிர்ந்தவர்கள் அதிக அளவில் நம் நாட்டில் இருப்பதால், நாடு முழுவதிலும் தடுப்பூசி மூலமே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கவேண்டியுள்ளது.
இயற்கையான தொற்றுக்கள் மூலம் நோயெதிர்ப்பு சக்தி வரும் என்று காத்திருந்தால் பலர் உயிரிழக்கும் நிலை உருவாகலாம் என்றார். ஏற்கனவே பெருமளவில் தடுப்பூசி வழங்கிவிட்டோம்.
இப்போது நாம் தடுப்பூசி வழங்கி முடித்துவிட்டால், 2022இல் pandemic நிலைமை முடிந்துவிட்டது என்றும் endemic என்ற நிலையை அடைந்துவிட்டோம் என்றும் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே கொள்ளைநோயின் முடிவுக் காலத்தை நெருங்கிவிட்டன என்று கூறிய Drosten, அதற்கு காரணம் அங்கு அதிக அளவில் தொற்று காணப்பட்டதுதான் என்கிறார். ஆனாலும், அதற்கான விலையாக அந்த நாடுகள் அதிக உயிரிழப்புக்களையும் சந்திக்க நேர்ந்தது என்றும் கூறியுள்ளார் அவர்.