ஜனவரி மாதம் முடிவதற்குள் 65 சதவிகித பிரித்தானியர்கள் கையில் பணமே இருக்காது... அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்
உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. முன்பெல்லாம், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் உணவு இல்லை, மக்கள் மண்ணைத் தின்கிறார்கள் என செய்திகள் வெளியானதைக் கேட்டு மனம் பதறும்.
சில ஏழ்மை மிகுந்த நாடுகளில், விலைவாசி காரணமாக இலவச உணவுக்கு மக்கள் அடித்துக்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகும்.
பண்டிகைக் காலங்களில், பிள்ளைகளுக்கு புது உடைகள் வாங்கிக்கொடுப்பதற்காக பெற்றோர் ராப்பகலாக உழைப்பார்கள். ஆனாலும் பணம் போதாமல், கடன் வாங்கும் நிலையையும் காணமுடியும்.
மாறிவிட்ட காட்சிகள்
ஆனால், இப்போதெல்லாம், ஏழை நாடுகள் என்றில்லை, வளர்ந்த நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளிலேயே சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலகட்டத்தில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இலவச உணவுப்பொருட்களுக்காக மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்களைக் காட்டும் புகைபடங்கள் வெளியாகி அதிரவைத்தன.
The guardian
கனடாவில், உணவு வங்கிகளில் வித்தியாசமே இல்லாமல் ஏராளமானோர் உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்பதைக் குறித்த செய்திகள் வெளியாகின.
தற்போது, பிரித்தானியாவில் மக்கள் நிலைமை குறித்த ஒரு ஆய்வு வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்
இந்த மாத இறுதிக்குள், இன்னும் தெளிவாகக் கூறினால், நாளை, அதாவது, ஜனவரி 20 திகதி நிலவரப்படி, பிரித்தானியாவில் 56 சதவிகித வயது வந்தவர்கள் கையில் பணமே இருக்காது என Credit Karma என்னும் நிதி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
குளிர்காலத்தை சமாளிப்பதற்காகவும், கிறிஸ்துமஸ் செலவுகளுக்காகவும், தங்கள் முழு சம்பளப்பணத்தையும் அவர்கள் செலவிட்டிருப்பார்கள், அவர்கள் கையில் பணம் எதுவும் மீதி இருக்காது.
அதன் விளைவாக, பலர் கடன் வாங்க முடிவு செய்திருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு. பிரித்தானியாவிலேயே இந்த நிலையா என ஆச்சரியப்பட வைக்கிறது இந்த செய்தி.
File pic
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |