பூமி அழியும் நாளை கண்டுபிடித்த ஜப்பானிய விஞ்ஞானிகள்
பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானின் Toho பல்கலைக்கழகம் மற்றும் NASA-வின் நிபுணர்கள் இணைந்து, பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் துல்லியமான நாளை கணித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சித் தகவலின்படி, அப்பொகலிப்ஸ் (apocalypse) அல்லது உலக அழிவு, 1,000,002,021-ஆம் ஆண்டு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகளின் பின்னணி, சூரியனின் மாற்றம். அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் மெதுவாக வெப்பத்தை அதிகரிக்க தொடங்கும். இதனால், கடல்கள் கொதித்து நீராவியாகி விண்வெளிக்கு சிதறும்.
அந்த நிலை, 999,999,996-ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும், பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
அதே நேரத்தில், NASA ஆய்வாளர்கள் சூரிய புயல்களின் உடனடி அபாயத்தையும் எச்சரிக்கின்றனர்.
2024-இல் வெளியான ஆய்வில், சூரியனில் இருந்து வெளியேறும் சக்திவாய்ந்த வெப்பக் கதிர்வீச்சுகள் மற்றும் CME வெளியேற்றங்கள்(Coronal Mass Ejections), பூமியின் வாயுவில் மாற்றங்களை ஏற்படுத்தி, வெப்பநிலை உயர்வுக்கும் ஆக்சிஜன் குறைவுக்கும் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டது.
மனித இனத்தின் நீடித்த வாழ்வுக்கு இரண்டு வழிகள் பரிந்துரை செய்யப்படுகின்றன:
- தன்னாட்சி வாழ்வு அமைப்புகள் (creating autonomous life support systems) - உள்ளடைக்கப்பட்ட சூழல்களில் மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன், நீர் போன்றவை செயற்கை முறையில் நிலையாக கிடைக்கச்செய்யும் தொழில்நுட்பங்களை அமைத்துக்கொள்ளவேண்டும்.
- வேறு கிரகத்திற்கு செல்லுதல் (interplanetary migration) - வாழ்வதற்குத் தகுந்த புதிய கிரகங்கள் தேடல் மற்றும் அந்த தூரங்களை கடக்கக் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டுபிடிக்க வேண்டும்.
உலக அழிவின் நாள் கணிக்கப்பட்டாலும், அதைத் தடுக்க மனிதம் செய்யக்கூடியவை இன்னும் இருப்பதாக அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Earth's Final Year Revealed, end of the world prediction, Japanese scientists apocalypse date, NASA Earth destruction timeline, solar expansion Earth future, year 1,000,002,021 apocalypse, future of Earth NASA, sun boiling oceans, interplanetary migration survival, solar storms Earth threat, Earth extinction countdown