நீங்கள் நினைத்தால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: நாடொன்றை வலியுறுத்தும் ஜேர்மனி
சீனா நினைத்தால், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ முடியும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.
நீங்கள் நினைத்தால் உக்ரைன் போரை முடிக்க முடியும்
சீன வெளியுறவுத்துறை அமைச்சரான Qin Gang, ஜேர்மனிக்கு வருகைபுரிந்துள்ளார், தொடர்ந்து அவர் பிரான்ஸ் மற்றும் நார்வேக்குச் செல்ல இருக்கிறார்.
அவரை தலைநகர் பெர்லினில் சந்தித்த ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, சீனா முடிவு செய்தால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்ற அந்நாட்டினால் முடியும் என்று கூறியுள்ளார்.
There is no lack of issues on which we need an understanding between #China & Germany, between China & the EU. @ABaerbock met her Chinese counterpart Qin Gang in Berlin today, in preparation for the ???? government consultations. 1/5 pic.twitter.com/hxmefo2uNW
— GermanForeignOffice (@GermanyDiplo) May 9, 2023
சீன வெளியுறவுத்துறை அமைச்சரான Qin Gangஐ சந்தித்தபின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய Annalena, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்னும் முறையில், சீனா முடிவு செய்தால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றார்.
நடுநிலை வேண்டாம்
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சந்திப்பில் Annalena முன்னிலையில் பேசிய Qin Gang, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்னும் முறையிலும், பொறுப்புள்ள பெரிய நாடு என்னும் முறையிலும் சீனா, தீப்பற்றி எரியும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இராது, அதே நேரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெயும் ஊற்றாது என்றார்.
ஆனால், போரில் சீனா ஒரு தெளிவான முடிவெடுக்கவேண்டும் என்று கூறிய Annalena, நடுநிலை வகிப்பது என்பது தாக்குதல் நடத்துபவருக்கு ஆதரவாக நிற்பதைப் போன்றது, ஆகவேதான், நாங்கள் தாக்கப்படுபவருக்கு ஆதரவாக நிற்கிறோம் என்றார்.