பிரான்சில் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கும் அரசு: விவரம் செய்திக்குள்...
பிரான்சில் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிதியுதவி ஒன்றை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மின்சாரம், எரிவாயு முதலான விடயங்களுக்கான கட்டணம் உயர்ந்துகொண்டே செல்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் நிதியதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆற்றல் காசோலைகள் (energy checks) என்ற பெயரில் ஏற்கனவே அரசின் உதவி பெற்று வரும் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கூடுதல் நிதியுதவி வழங்கப்பட உள்ளது
ஏற்கனவே அந்த நிதியதவி பெற்றுவருவோர் இந்த கூடுதல் நிதியுதவியைப் பெறுவதற்கு வேறொன்றும் செய்யவேண்டியதில்லை. தானாகவே அது தபால் வாயிலாக டிசம்பர் மாதத்தில் அவர்களை வந்தடைந்துவிடும்.
இந்த திட்டம் பிரான்ஸ் குடிமக்களுக்கு மட்டுமல்ல, பிரான்சில் வாழும் உரிமை கொண்ட அனவருக்குமானது. ஆனால், குறைந்த வருவாய் கொண்ட பிரான்ஸ் வாழிட உரிமம் கொண்டவர்கள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்
மேலதிக விவரங்களுக்கு... https://www.thelocal.fr/20210916/frances-one-off-e100-energy-grant-for-low-income-households/