ஆண்டுக்கு 6,000 பவுண்டுகள்... பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாகும் தகவல்
எரிவாயு வழங்கலை ரத்து செய்த பின்னர், எரிவாயு கட்டணமானது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
புதுப்பிக்கப்படும் எரிசக்தி விலை வரம்பு காரணமாக கட்டணங்கள் அடுத்த ஆண்டு இன்னும் அதிக அளவில் இருக்கும்
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணமானது பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாக அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில், இந்த வாரம் புதுப்பிக்கப்படும் எரிசக்தி விலை வரம்பு காரணமாக கட்டணங்கள் அடுத்த ஆண்டு இன்னும் அதிக அளவில் இருக்கும் என்றே தெரியவந்துள்ளது.
தற்போதைய கட்டணங்களை விடவும் ஐந்து மடங்கு அதிகரித்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 6,089 பவுண்டுகள் என அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
ரஷ்ய நிர்வாகமானது எரிவாயு வழங்கலை ரத்து செய்த பின்னர், எரிவாயு கட்டணமானது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதனால் பெரும்பாலான அடித்தட்டு மக்கள் கடும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணம் அமுலுக்கு வரும் எனவும்,
தற்போதைய கட்டணம் 1,971 பவுண்டுகளில் இருந்து சுமார் 3,576 பவுண்டுகள் என அதிகரிக்கும் என Ofgem அறிவித்துள்ளது.
ஆனால், தற்போதைய 400 பவுண்டுகள் சலுகையை அமைச்சர்கள் உறுதியளித்துள்ளபடி அதிகரிக்கவில்லை எனில், அடுத்த ஆண்டில் மில்லியன் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலைவரும் என்று அஞ்சப்படுகிறது.