மோசடியில் ஈடுபட்ட பிரபல செல்போன் நிறுவனம்.. 5,551 கோடியை முடக்கி அதிரடி காட்டிய அமலாக்கத்துறை!
பிரபல செல்போன் நிறுவனமான Xiaomi இந்தியாவின் 5,551.27 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு Xiaomi நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டே பணத்தை அனுப்பவும் தொடங்கியது. இந்த நிறுவனமானது, சீனாவை தலைமையிடமாகக் கொண்ட Xiaomi குழுமத்தின் துணை நிறுவனமாகும்.
Xiaomi Technology India Private Limited என்று அழைக்கப்படும் Xiaomi, MI என்ற பிராண்ட் பெயரில் செல்போன் வர்த்தகம் மற்றும் விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், இந்திய அந்நியச் செலவாணி சட்டத்தை மீறியதாக Xiaomi மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், Xiaomi நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதாக தெரியவந்தது.
அதாவது, சுமார் 5,551.27 கோடிக்கு சமமான வெளிநாட்டு பணத்தை ராயல்டி என்ற போர்வையில், ஒரு Xiaomi குழும நிறுவனத்தை உள்ளடக்கிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது தெரிய வந்தது. அத்துடன் அந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் எந்த சேவையையும் Xiaomi பெறவில்லை.
மேலும், வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பும் போது வங்கிகளுக்கு தவறான தகவல்களையும் Xiaomi வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் அமலாக்க இயக்குனரகம் அதிரடி நடவடிக்கையாக, Xiaomi-யின் வாங்கிக் கணக்குகளில் இருந்த 5,551.27 கோடியை கைப்பற்றியுள்ளது.