3வது ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னங்ஸில் இங்கிலாந்தை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது அவுஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு சுருண்டது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டிலும் அவுஸ்திரேலிய வெற்றிப்பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 26 மெல்போர்னில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தொடங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 185 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 50 ரன்கள் அடித்தார். அவுஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தற்போது, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.
3வது டெஸ்ட் போட்டியையும் வென்று அவுஸ்திரேலிய அணி அஷஸ் தொடரை கைப்பற்றும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.